காஞ்சிபுரம் டிச. 24–
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி வி.சோமசுந்தரம் தலைமையில் பல்வேறு பகுதியில் எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 38 வது நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பகுதிக்கு உட்பட்ட களக்காட்டூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி ஏற்பாட்டில் , ஓரிக்கை பகுதியில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி ஜீவானந்தம் முன்னிலையில் பகுதி செயலாளர் கோல்டு எம். ரவி , வட்ட செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் ஏற்பாட்டிலும் காஞ்சிபுரம் மாநகராட்சி அருகே பகுதி செயலாளர் வி.பாலாஜி ஏற்பாட்டிலும் காந்திரோடு தேரடி பகுதியில் பகுதி செயலாளர் என்பி.ஸ்டாலின், வாசு ஆகியோர் ஏற்பாட்டிலும்,
வாலாஜாபாத் பகுதியில் ஒன்றிய செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், அக்ரிநாகராஜ் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி கழக செயலாளர் மார்க்கெட் அரிகுமார் ஏற்பாட்டிலும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட கழக துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் முன்னிலையில் போந்தூர் மோகன் ஏற்பாட்டிலும், மாங்காடு பகுதியில் மாங்காடு நகர கழக செயலாளர் மாங்காடு பிரேம்சேகர் , ஒன்றிய பாசறை செயலாளர் மாங்காடு பரத்ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி தீப ஆராதனை காண்பித்து அவரின் புகழை போற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், துணை செயலாளர் ஒரத்தூர் என்டி.சுந்தர், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்எஸ்ஆர்.சத்யா, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம், மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பட்டூர் இம்தியாஸ், மாநில கலைப்பிரிவு துணைச்செயலாளர் டில்லிபாபு, மாநில கைத்தறி பிரிவு துணைச்செயலாளர் யுவராஜ், மாநில போக்குவரத்து பிரிவு துணைத்தலைவர் மனோகரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆர்டி.சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேயுஎஸ்.சோமசுந்தரம், மாவட்ட பாசறை செயலாளர், விஆர். மணிவண்ணன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் வழக்கறிஞர் படப்பை ஆ.ராஜேந்திரன், இணைச் செயலாளர் கல்வெட்டு பி.சிவாஜி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்எம்.மதன், மாவட்ட கைத்தறி பிரிவு செய்வாளர் வில்வபதி, மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் என்ஆர்.பழனி, மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கோல்டு மோகன், மாவட்ட பாசறை துணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை தலைவர் கலைமணி, பகுதி கழக செயலாளர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ்,
பொதுக்குழு உறுப்பினர் மேல்ஒட்டிவாக்கம் ஓவி.ரமேஷ் , முன்னாள் பொருளாளர் ராஜசிம்மன், மாமன்ற உறுப்பினர்கள் சிந்தன், வேலரசு, ஜோதிலட்சுமி சிவாஜி, புனிதா சம்பத், வட்டக் கழக செயலாளர்கள் ஆர்டி.பெருமாள் , திருக்காலிமேடு சிவகுமார், தமிழ், அரசு ஒப்பந்ததாரர் மணி, பிடபிள்யுடி மோகன், நடுவீரப்பட்டு தீபன்ராஜ், மகளிர் அணியினர், அண்ணா திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
![]()





