காஞ்சிபுரம் டிச. 16:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ் சுஜாதா, தலைமையில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் /முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ். அருண் சபாபதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், காஞ்சிபுரம் எஸ். மோகனாம்பாள், கூடுதல் சார்பு நீதிபதி, காஞ்சிபுரம் டி.திருமால், மேலும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சந்தியாதேவி, நீதித்துறை நடுவர் எண் -1 நீதிபதி இனியா கருணாகரன், நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி டி. நவீன் துரைபாபு மற்றும் காஞ்சிபுரம், வழக்கறிஞர்கள் எஸ். ஜான், சி.பத்மநாபன், டி.துரைமுருகன், ஜெ. ஜோசப்சுந்தர் , ஆல்பின் எடிசன் மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், அசல் வழக்குகள் வங்கி வாராக் கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப நலவழக்குகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் வட்டம் முழுவதும் மொத்தமாக 2,198 எடுத்துக் கொள்ளப்பட்டு, 569 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு மொத்த இழப்பீட்டு தொகையாக ரூபாய். 10,99,66,683 வழங்கப்பட்டுள்ளது. வங்கி வழக்குகள் மொத்தம் 1955 வழக்குகள் எடுக்கப்பட்டு 65 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் ரூபாய்.49,58,100 தொகைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை காஞ்சிபுரம், வட்ட சட்டப் பணிகள் குழுவின், நிர்வாக உதவியாளர் எஸ்சத்தீஷ்ராஜ் உடனிருந்து ஏற்பாடு செய்தார்.
![]()





