செய்திகள்

காஞ்சிபுரம் கூட்டுறவு வாரவிழாவில் 1111 மகளிருக்கு நல உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

Makkal Kural Official

காஞ்சிபுரம் நவ. 17–

காஞ்சிபுரம் செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடப்பு ஆண்டில் “தன்னிறைவு பெற உதவும் கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள்” என்ற தலைப்பில் 7 நாள் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 1111 உறுப்பினர்களுக்கு ரூ10.96 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக் கடன், 37 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன், 53 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன், 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிறுவணிகக்கடன், 85 பயனாளிகளுக்கு ரூ. 43 லட்சம் மதிப்பிலான டாப்செட்கோ கடன், 3 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான நாட்டுப்புற கலைஞர் கடன், 4 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பண்ணைசாரா கடன், 5 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான மகளிர் தொழில் முனைவோர் கடன், 9 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிக்கடன், 3 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஆதரவற்ற விதவைகள் கடன் மற்றும் 20 பயனாளிகளுக்கு ரூ. 1.33 கோடி மதிப்பிலான வீட்டு அடமானக்கடன் என மொத்தம் 1340 பயனாளிகளுக்கு ரூ.13.58 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது எனவும் கூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற வேண்டும் என அமைச்சர் காந்தி கேட்டுக் கொண்டார்.

எம்.எல்.ஏ. சுந்தர்

இவ்விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு, சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் சதீஷ் , மாவட்ட கூட்டுறவு துறையின் ஒன்றிய மேலாளர் முரளி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள், பயனாளிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *