செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

Makkal Kural Official

புனே, ஜன. 6–

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (வயது 81) இன்று காலமானார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரான கல்மாடி, புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானதாக அவரது அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தினர். சுரேஷ் கல்மாடியின் உடல் புனேவின் எரண்ட்வானேயில் உள்ள அவரது வீட்டில் பிற்பகல் 2 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். அதைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கி நவி பெத்தில் உள்ள வைகுந்த் ஸ்மஷன்பூமியில் தகனம் செய்யப்படவுள்ளது.

இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

காலமான சுரேஷ் கல்மாடிக்கு மனைவி, மகன், மருமகள், இரண்டு திருமணமான மகள்கள் மற்றும் மருமகன்கள், பேரக்குழந்தைகள் உள்ளனர்.

1944ம் ஆண்டு மே 1ம் தேதி புனேயில் சுரேஷ் கல்மாடி பிறந்தார். தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்த அவர், பல ஆண்டுகளாக தேசிய அளவில் விளையாட்டு நிர்வாகத்திலும் தலைமை வகித்தார். இந்திய விமானப் படையில் 1964 முதல் 1972 வரைப் பணியாற்றிய சுரேஷ் கல்மாடி, 1974ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அதன்பின்னர், அரசியலில் நுழைந்த அவர் 1995 முதல் 1996ம் ஆண்டுகளுக்கு இடையிலான நரசிம்மராவ்வின் இடைக்கால காங்கிரஸ் அமைச்சரவையில் ரெயில்வே துறை இணையமைச்சராகப் பணியாற்றினார். 1982, 1996, 1998 என 3 முறை புனே தொகுதியில் இருந்து மாநிலங்களை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

விளையாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2011ல் கைது செய்யப்பட்டார். சர்ச்சைகள் இருந்த போதிலும் விளையாட்டு துறையில் சுரேஷ் கல்மாடி தொடர்ந்து செல்வாக்கு செலுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *