செய்திகள்

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

Makkal Kural Official

புதுடெல்லி, டிச. 12:

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1–ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அவையில் தேர்தல் சீர்திருத்தம், எஸ்ஐஆர், இண்டிகோ விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. வருகிற டிசம்பர் 19–ந்தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது அவையில் நடைபெற்று வரும் விவாதங்கள், இனி எழுப்ப வேண்டிய மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிவ்ராஜ் பாட்டீலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதன்பின்னர் அவையில் பேசிய அமித்ஷா, காங்கிரஸையும் நேருவையும் குற்றம்சாட்டினார். தான் எழுப்பிய கேள்விகளுக்கு அமித்ஷா இன்னும் பதிலளிக்கவில்லை என்று ராகுல் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *