செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே நடந்த துணிகரம் வயதான தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைக் கொள்ளை

Makkal Kural Official

கள்ளக்குறிச்சி, ஜூலை 3–

கள்ளக்குறிச்சி அருகே வயதான தம்பதிகளை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கடுவனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தமது 2வது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக வங்கி லாக்கரில் இருந்து 200 சவரன் நகைகளை எடுத்து வைத்திருந்த கேசரி வர்மன் அவசர வேலையாக சென்னை சென்றுவிட்டார்.

இந்த தருணத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கேசரி வர்மன் வீட்டின் பின்பக்க கதவின் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், பயங்கர ஆயுதங்களால் கேசரி வர்மனின் தாய் பொன்னம்மாள், தந்தை முனியன் ஆகியோரை தாக்கி கத்திமுனையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *