செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 72-வது கூட்டுறவு வார விழா: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

Makkal Kural Official

கள்ளக்குறிச்சி, நவ. 18–

கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகன் மற்றும் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இவ்விழாவில் கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கும் , சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கும் , நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கும், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.‌

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜீவா, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் இரா.புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் இரா.சுப்பராயலு, ஒன்றியக்குழுத் தலைவர்கள் அலமேலு ஆறுமுகம், மா.சத்தியமூர்த்தி, தாமோதரன், ப.ராஜவேல், திருக்கோவிலூர் சரகத் துணைப்பதிவாளர் செ.குறிஞ்சி மணவாளன், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *