செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் : ஸ்டாலின் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, டிச. 29:

கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் அய்யாக்கண்ணு என்பவரின் மகன் ராஜகோபால் (வயது 57) என்பவர் நேற்று (28–ந் தேதி) காலை தனக்குச் சொந்தமான கிணற்றில் உள்ள விவசாய மின்மோட்டாரினை விவசாயத்திற்காக இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த ராஜகோபாலின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *