செய்திகள்

கல்யாண் ஜூவல்லர்ஸ் சென்னையில் 2 புதிய கிளை நடிகர் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி துவங்கினர்

Makkal Kural Official

சென்னை, டிச 9–

கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையில் ஈ.சி.ஆர் மற்றும் ரெட் ஹில்ஸ் பகுதியில் புதிய ஷோரூம்களை நடிகர் பிரபு, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இந்த புதிய கிளைகளைத்

திறந்து வைத்தனர். சென்னைப் பகுதியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் தனது

வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய கிளைகளைத்

தொடங்கியிருக்கிறது.

இந்த விற்பனை நிலையங்களில் கல்யாண் ஜுவல்லர்ஸின் பிரபல அறிமுகமான முகூரத் (திருமண நகை வரிசை), முத்ரா (கையால் செய்யப்பட்ட பழங்கால பாணியிலான நகைகள்), நிமாஹ் (கோயில் நகைகள்) உள்ளிட்ட எண்ணற்ற பிரத்தியேக வடிவமைப்புகளிலான நகைகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் ரமேஷ்

கல்யாணராமன் கூறுகையில், “சென்னையில் திறக்கப்பட்டுள்ள எங்களது இந்த இரண்டு புதிய கிளைகள் மூலம், வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப ஒரு முழுமையான ஷாப்பிங் தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை எனும் எங்களின் நிலையான கொள்கைகளிலிருந்து

மாறாமல், உலகத்தரம் வாய்ந்த சிறப்பான சூழலையும், வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சேவையையும் மக்களுக்கு வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்றார்.

புதிய விற்பனை நிலையங்களின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக, கல்யாண் ஜூவல்லர்ஸ் பலவிதமான பிரத்தியேகமான விற்பனை நிலைய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட்ட நகைகள்: செய்கூலியில் (Value addition) கிராமுக்கு ரூ. 750 தள்ளுபடி வழங்குகிறது.

ப்ரீமியம் & கற்கள் பதித்த நகைகள்: செய்கூலியில் கிராமுக்கு ரூ. 1500 தள்ளுபடி. கோவில் ஆபரணங்கள் & ஆன்டிக் நகைகள்: செய்கூலியில் கிராமுக்கு ரூ. 1000 தள்ளுபடி. சந்தையில் மிகவும் குறைவாக உள்ள, அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும், கல்யாணின் சிறப்பு தங்க விலை (Kalyan’s Special Gold Board Rate) போன்ற பலன்களும் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை நிலைய அறிமுக சலுகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

இந்நிறுவனத்தில் விற்பனைக்கு உள்ள ஒவ்வொரு நகையும் பிஐஎஸ் ஹால்மார்க் தர முத்திரை உள்ளதுடன், அவற்றின் உயர் தரத்தை உறுதி செய்யும் பல தூய்மைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *