* ஒருவர் உடல் மீட்பு * மற்றவர்களை மீட்பதில் மின்னல்வேகம்
லக்னோ, நவ. 16–
உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் கல்குவாரியில் பாறைகள் சரிந்தன. இதில் 15 தொழிலாளர்கள் சிக்கினர். தற்போது அங்கு அவர்களை மீட்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குவாரி உள்ளே, பெரிய பள்ளம் தோண்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்தன. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை தொழிலாளர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
![]()





