சென்னை, ஜன.1–
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, ‘டி.எம். ஜானி கலைக்குழு’-வை நடத்தி வந்த டி.எம். ஜானி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு டி.எம். ஜானி தனது கலைக்குழுவின் மூலம், கழகத்தின் கொள்கைகளையும், முந்தைய கழக அரசுகளின் சாதனைகளையும், திமுக ஆட்சியின் மக்கள் விரோதச் செயல்களையும், நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார்.
ஆரம்பகால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் டி.எம். ஜானியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
![]()





