சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தின் 173-வது படம்: டைரக்டர் சிபி சக்கரவர்த்தி

Makkal Kural Official

சென்னை, ஜன. 3:

கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த் நடிக்க திரைப்படம் தயாரிக்கிறார் அல்லவா? இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னர், இதற்கான அறிவிப்பு வெளியானது. அதில் சுந்தர்.சி, இயக்குனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படத்தை இயக்குவதில் இருந்து சுந்தர் சி விலகி விட்டார்.

சுந்தர் சி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது ‘மூக்குத்தி அம்மன்–2′ படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.

இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் கே.எஸ்.ரவிகுமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பெயர் அடிபட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் யார் என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *