செய்திகள்

கன்னியாகுமரியில் அரசு பஸ் – மோட்டார் சைக்கிள்

Makkal Kural Official

கன்னியாகுமரி, ஜூலை 26–

கன்னியாகுமரியில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அப்சல் (வயது 17), அஜ்மல் (வயது 16), நாசில் (வயது 15), அஜித் (வயது 17). இதில் அஜ்மல் பிளஸ் 2, நாசில் பிளஸ் 1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவர்.

இந்நிலையில் குழித்துறையில் நடைபெற்று வரும் வாவுபலி பொருட்காட்சியை பார்க்க நேற்று மாலை நண்பர்கள் 4 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை அப்சல் ஓட்டிச்சென்றார். மார்த்தாண்டம் அருகே கல்லுத்தொட்டி பகுதியை சென்றடைந்த போது சாலையில் எதிரே வந்த அரசு பஸ்சும், அப்சல் ஓட்டிய மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த 4 பேருக்கும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து, படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அப்சல், அஜித் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார். மோட்டார் சைக்கிள் விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *