செய்திகள்

கனிமொழிக்கு ஸ்டாலின் அமித்ஷா, விஜய் பிறந்தநாள் வாழ்த்து

Makkal Kural Official

சென்னை, ஜன.5–

தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தி்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா, த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யு.மான கனிமொழி இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர்– நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே 2 நாட்கள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல த.வெ.க. தலைவர் விஜய்யும் கனிமொழிக்கு தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தி.மு.க. எம்பி கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:– இந்திய அரசியலின் தெளிவான, துணிவான குரல்களுள் ஒன்றாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான அன்புச் சகோதரி கனிமொழிக்குப் பிறந்த நாள் வாழ்த்து. ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி மற்றும் தமிழ் அடையாளம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *