செய்திகள்

கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்

Makkal Kural Official

கடலூர், நவ.24–

கடலூரில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.11,500 வீதம் மொத்தம் ரூ.34,500 மதிப்பீட்டிலான மூன்று சக்கர மிதிவிண்டிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 335 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், தனித்துணை ஆட்சியர் தங்கமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *