சென்னை, ஜன.25-
அண்ணா தி.மு.க. இணைப்பு ஒன்று கூடாததால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. தர்மர் அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தபோதும், அவர் அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்படவில்லை.
இந்தநிலையில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தர்மர் எம்.பி. நேற்று சந்தித்து, தன்னை அண்ணா தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘யாருடனும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஜெயலலிதா கனவை நனவாக்க இணைந்தோம். தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும். மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். அ.தி.மு.க. எம்.பி.யாகவே நாடாளுமன்றத்தில் உள்ளேன்” என்றார்.
![]()




