சென்னை, டிச. 18:
பரோடா வங்கி ஓ.என்.ஜி.சி. விதேஷ் (ஓவிஎல்) முழு உரிமை துணை நிறுவனமான ஓவிஎல் ஓவாசீஸ் (ஓஓஐஎல்) நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் அளவிலான 5 ஆண்டு வெளிநாட்டு நாணய காலக் கடன் வசதிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–
இந்த 50 கோடி டாலர் வசதிக்கான ஒப்பந்தம், பரோடா வங்கியின் ஒருங்கிணைந்த வெளிநாட்டு நாணய கடன் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனை, கிப்ட் சிட்டியின் வளர்ச்சி முதிர்ச்சியையும், இந்திய வங்கிகளின் எல்லை கடந்த நிதி திரட்டல் திறனையும், ஓஎன்ஜிசி போன்ற அரசு நிறுவனங்களின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு வங்கி ஆதரவளிப்பதையும் எடுத்துக்காட்டுகிறது என்று வங்கியின் நிர்வாக இயக்குநர் லலித் தியாகி தெரிவித்தார்.
காலக் கடன் வசதிக்கான வரைவு நிகழ்ச்சி, கிப்ட் சிட்டியில் உள்ள பரோடா வங்கியின் ஐஎப்எஸ்சி வங்கிப் பிரிவில் நடைபெற்றது. பரோடா வங்கி மற்றும் ஓஎன்ஜிசி விதேஷ் லிமிடெட் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()





