சென்னை, டிச. 21–
ஓடும் ரயில்களில் கல் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓடும் ரயில்கள் மீது கல் வீசும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, ரயில்வே காவல்துறை உடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்புப் படை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 37-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களுக்கு அருகே விளையாடும் சிறுவர்களே இதுபோன்ற பல சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இதை அவர்கள் பெரும்பாலும் ஒரு விளையாட்டாகக் கருதுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இச்செயல்கள் பயணிகளுக்குக் கடுமையான காயங்களையும், ரயில்வே சொத்துக்களுக்கு சேதத்தையும் விளைவிக்கும் ஆபத்து கொண்டவை. இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, சென்னை கோட்டம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:
ரயில்கள் மீது கல் வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்; இதில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள், ரயில் தண்டவாளங்களுக்கு அருகே விளையாடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், கல் வீச்சு சம்பவங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து ரயில்வே உதவி எண் 139-ல் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
![]()





