சென்னை, டிச.12:
வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால் இவற்றின் தேவை அதிகரித்து விலை உயர்கிறது. விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்படுகிறது. இந்த சூழலில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.96,240-க்கு விற்பனையானது. தொடா்ந்து, நேற்று தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.12,050-க்கும், சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.96,400-க்கும் விற்பனையானது.
22 காரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,250-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியும் உயர்ந்தது
தொழிற்சாலை பயன்பாட்டில் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெள்ளி விலை தொடா்ந்து உயா்ந்துள்ளது. அந்த வகையில், நேற்று முன் தினம் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.8,000 உயர்ந்து ரூ.2.07 லட்சத்துக்கும் விற்பனையானது. தொடா்ந்து நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.209-க்கும், ஒரு கிலோ ரூ.2,000 உயா்ந்து ரூ.2.09 லட்சத்துக்கும் விற்பனையானது. வெள்ளி இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயா்ந்து ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.6,000 உயர்ந்து ரூ.2.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
![]()




