செய்திகள்

ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்

Makkal Kural Official

சென்னை, செப்.16–

சென்னையில் ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 12 ஆயிரத்து 255 தெருநாய்களுக்கு முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021 முதல் இதுவரை 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த்தடுப்பூசியும், 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

தற்போது நாய்களைப் பிடிக்கும் பணியை மேற்கொள்ள 23 நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திற்கும் 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாய் பிடிப்பவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு, நாய்களைப் பிடித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாய்களைப் பிடிப்பதற்காக வலைகள் வழங்கப்பட்டு, அதனைக் கொண்டு நாய்கள் பிடிக்கப்படுகின்றன. நாய்களை முறையாகப் பிடித்து விடுவிப்பதை உறுதி செய்வதற்காக, QR குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 12,255 தெருநாய்களுக்கு மேற்கண்ட QR குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.

–––––––––––––––––––––––––

தெருக்களில் பிடிக்கப்படும் தெருநாய்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெருநாய்களை பரிசோதித்து, உடற்தகுதியுள்ள தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு 4 முதல் 6 நாட்கள் வரை பராமரிக்கப்படுகிறது. அவ்வாறு பராமரிக்கப்படும் நாய்களுக்கு செறிவூட்டப்பட்ட (Pellet) உணவும், சமைத்த அசைவ உணவும் வழங்கப்பட்டு வருகிறது. வெறிநாய்க்கடி நோய் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய்கள் தனிக் கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தினசரிசராசரியாகதெருநாய்களுக்குகருத்தடைஅறுவைசிகிச்சைமையங்களில்மேற்கொள்ளப்படும்கருத்தடைஅறுவைசிகிச்சைவிவரங்கள்

புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாப்பேட்டை ஆகிய 3 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் சராசரியாக தலா 30 நாய்கள் வீதம் 90 தெருநாய்களுக்கும், மீனம்பாக்கம் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் சராசரியாக 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் சராசரியாக 10 தெருநாய்களுக்கும் என இந்த 5 நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களில் சராசரியாக நாளொன்றுக்கு 115 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட விவரம்

மேற்கண்ட மையங்களின் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 15.09.2025 வரை 88,439 தெருநாய்கள், 46,235 செல்லப் பிராணிகள் என மொத்தம் 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும், இதில் கருத்தடை செய்ய தகுதியுள்ள 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெருநாய்கள் கணக்கெடுப்பு விவரம்

கடந்த ஆண்டு (2024) Worldwide Veterinary Services (WVS) என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட தெரு நாய்கள் கணக்கெடுப்பில் சுமார் 1,80,000 தெருநாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தெருநாய்கள்பெருக்கம்மற்றும்அதனைக்கட்டுப்படுத்தகூடுதல்நடவடிக்கைகள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடமிருந்தும், செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அதிகளவில் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாத பெண் நாய் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு இருமுறை கருவுற்று, சுமார் 10 குட்டிகள் வரை ஈனும் வாய்ப்புள்ளது என்பதால், அதிகளவில் நாய்கள் பெருக்க உருவாகிறது. எனவே, பெண் நாய்களை அதிக எண்ணிக்கையில் பிடித்து அவற்றிற்கு அறுவை சிகிச்சை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலமே அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க இயலும். எனவே, இப்பணியை தொய்வின்றி மேற்கொள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கூடுதலாக 10 எண்ணிக்கையிலான நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை ஆகிய மையங்களில் தலா 140 பராமரிப்புக் கூண்டுகள் (Kennels & Cages) பயன்பாட்டில் உள்ளது. கருத்தடை அறுவை சிகிச்சை எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த கூடுதலாக ஒவ்வொரு மையத்திற்கும் தலா 100 எண்ணிக்கையிலான கூண்டுகள் (Kennels & Cages) அமைக்கப்பட்டு வருகிறது.

கால்நடைமருத்துவர்கள்மற்றும்பணியாளர்கள்விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள தற்போது 16 கால்நடை உதவி மருத்துவர்கள் ,11 ஒப்பந்த கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் 5 கருத்தடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மொத்தம் 78 நாய் பிடிக்கும் ஊழியர்களும், 105 கருத்தடை மைய ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இப்பணிகளை கண்காணிக்க தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மூலம் 3 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணிகளில் ஒத்துழைக்க அறிவுசார் பங்குதாரர்களாக (Technical Partner) Worldwide Veterinary Services, Besant Memorial Animal Dispensary ஆகிய தொண்டு நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகுமேயர்அவர்களின்நிதிநிலைஅறிக்கைஅறிவிப்பின்படிவெறிநாய்க்கடிநோய்த்தடுப்பூசிசெலுத்துவதற்கானசிறப்புமுகாம்நடவடிக்கைகள்

பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தும் திட்டம் 09.08.2025 அன்று மாண்புமிகு மேயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களின் வாயிலாக இதுவரை மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் இப்பணி நிறைவு பெற்று, மொத்தம் 46,122 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகள்வளர்ப்பினைமுறைப்படுத்தமேற்கொள்ளப்பட்டுவரும்நடவடிக்கைகள்:

v நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023, பிரிவு 292-ன் படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்கள் செல்லப்பிராணி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

v பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்யவும், இணையவழியிலும், வாட்ஸ்ஆப் எண் 94450 61913 வாயிலாகவும் செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை எளிதாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த உரிமம் பெறுவதற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்போர் செல்லப் பிராணி ஒன்றிற்கு மிகக் குறைந்த கட்டணமாக ரூ.50/- மட்டும் உரிமக் கட்டணமாக செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

v செல்லப்பிராணி உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக உரிமம் பெற செல்லப்பிராணியின் உரிமையாளர் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும். பதிவேற்றப்பட்ட விவரங்கள் மண்டல கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, ரூ50/-ஆண்டு கட்டணம் பெறப்பட்டு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

செல்லப்பிராணிஉரிமம்பெறுவதற்கானநிபந்தனைகள்

v கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம், தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் ஆகியவற்றிற்கு செல்லப்பிராணியின் உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

v பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள எந்தவொரு சாலை/தெரு/சாக்கடையிலும் தனது நாய்/செல்லப்பிராணியை கழிவு ஏற்படுத்த எந்த உரிமையாளரோ அல்லது நாயின் பொறுப்பாளரோ அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் நாய் சாலை /தெரு/சாக்கடையில் கழிவு ஏற்படுத்துவது கண்டறியப்பட்டால், அக்கழிவை சுத்தம் செய்து முறையாக அப்புறப்படுத்துவது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.

v தங்கள் செல்லப்பிராணிகளை மற்றவர்களுக்கு தொந்தரவு அல்லது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தாமல் வைத்திருக்க வேண்டும்.

மேலும், செல்லப் பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் அழைத்துச் செல்லும் போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்களில் முகமூடி இல்லாமல் திரிய விட்டாலோ அல்லது அழைத்துச் சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளுக்கானஉரிமங்கள்மற்றும்மைக்ரோசிப்பொருத்துதல்

இதுவரை இணைய வழியாக 13,287 செல்லப்பிராணி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், செல்லப்பிராணி உரிமம் வழங்கப்படும்போதே அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் மைக்ரோ சிப்பிங் செலுத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை (Pet Abandonment) தடுக்கவும் இயலும்.

செல்லப்பிராணிகள்மற்றும்நாய்களின்தரவுகளைசேமித்துகண்காணித்தல்தொடர்பானநடவடிக்கைகள்

2,00,000 எண்ணிக்கையிலான செல்லப்பிராணிகள் மற்றும் நாய்களின் தரவுகளை சேமித்தல் மற்றும் மேலாண்மை செய்தல், பிரத்யேக மென்பொருள் உருவாக்குதல், விரிவான தளத்தை வடிவமைத்தல், செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல், நாய் பிடிப்பவர்களுக்கான மொபைல் செயலியை உருவாக்குதல், செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் போர்டல் உருவாக்குதல், பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகிய பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மாண்பமைஉச்சநீதிமன்றஇடைக்காலதீர்ப்புநாள் : 22.08.2025

கடந்த 22.08.2025 அன்றுமாண்பமைஉச்சநீதிமன்றத்தில்மூன்றுநீதிபதிகள்கொண்டஅமர்வுவழங்கியஇடைக்காலதீர்ப்பின்படிவெறிநாய்க்கடிநோயால் (Rabies Affected Dogs) பாதிக்கப்பட்டநாய்கள்வெறிநாய்க்கடிநோய்இருப்பதாகசந்தேகிக்கப்படும்நாய்கள் (Rabies Suspected Dogs), ஆக்ரோஷமானநாய்கள்ஆகியவைபிடிக்கப்பட்டுஅவைபிரத்யேகமானகாப்பகத்தில்வைத்துஉரியசிகிச்சைஉள்ளிட்டநடவடிக்கைகள்வழங்கப்படவேண்டும்அவைஎக்காரணம்கொண்டும்மீண்டும்விடுவிக்கப்படக்கூடாது.

இந்தமூன்றுவிதமானநாய்களைதவிரபிறதெருநாய்கள்பிடிக்கப்பட்டுஅவற்றிற்குகருத்தடைசிகிச்சைரேபிஸ்தடுப்பூசிசெலுத்தப்பட்டபிறகுஅவைமீண்டும்பிடிக்கப்பட்டஇடத்திலேயேவிடுவிக்கப்படவேண்டும்.

உள்ளாட்சிஅமைப்புகள்தெருநாய்களுக்குஉணவுஅளிப்பதற்காகஒவ்வொருவார்டுகளிலும்ஒருபிரத்யேகஇடத்தைஒதுக்கிஅவ்விடத்தில்நாய்களுக்குஉணவுவழங்குவதுகுறித்தஅறிவிப்புபலகையைவைத்திடவேண்டும்அந்தஇடத்தில்மட்டும்தான்உணவுவழங்கவேண்டும்இந்தநிர்ணயிக்கப்பட்டஇடங்களைத்தவிரபிறஇடங்களில்உணவுவழங்கக்கூடாதுமீறுபவர்கள்மீதுசட்டப்பூர்வநடவடிக்கைகள்மேற்கொள்ளப்படவேண்டும்எனவும்மாண்பமைஉச்சநீதிமன்றம்தனதுஇடைக்காலஉத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறிநாய்க்கடிநோயால் (Rabies Affected Dogs) பாதிக்கப்பட்டநாய்கள்வெறிநாய்க்கடிநோய்இருப்பதாகசந்தேகிக்கப்படும்நாய்கள் (Rabies Suspected Dogs), ஆக்ரோஷமானநாய்கள்ஆகியவற்றிற்குபுறநகர்பகுதிகளில் 500 நாய்கள்வைத்துபராமரிப்பதற்காகபிரத்யேகமாகஇடம்தேர்வுசெய்யும்நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி வெளியீடு : இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்,

பெருநகர சென்னை மாநகராட்சி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *