செய்திகள்

ஒரு சவரன் தங்கம் ரூ.95 ஆயிரத்தை கடந்தது

Makkal Kural Official

சென்னை, அக்.16–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 11,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 94,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,900க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *