துபாய், ஜூலை 1–
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிர்வாக நடைமுறைகள் அனைத்தும் இன்றுமுதல் டிஜிட்டல் முறைக்கு மாற்றங்கள் செய்யப்பட்டு அனைத்தும் எளிமைபடுத்தப்பட உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், குடியிருப்பாளர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிர்வாகத்தை எளிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.
முதலாவதாக, விசா நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட உள்ளது. புதிய டிஜிட்டல் மாடல் மூலம் ஆவண சரிபார்ப்பு, விண்ணப்ப செயல்முறை விரைவாக முடியும். புதிய வசதிகள் மூலம் குடியிருப்பாளர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் தடையின்றி சமர்ப்பித்து, தீர்வு பெற முடியும். வருங்காலத்தில் குடும்ப விசாக்களுக்கும், வேலை விசா புதுப்பிப்புக்கும் இந்த மாற்றம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலைகள் கண்காணிப்பு
அடுத்து, சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய நியமனங்கள், தரமான பராமரிப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். விரைவில் புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், டெலிமெடிசின் வசதி, மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் பரவலாக பயன்பாட்டுக்கு வரும்.
கல்வித் துறையில் புதிய கட்டமைப்பு மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கும். யுஏஇ கல்வித் துறையில் தரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் சர்வதேச தரச் சான்றுகள் கொண்ட பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. தனியார் பள்ளிகள், சர்வதேச பாடசாலைகள் கூடுதல் கண்காணிப்பு மற்றும் ஒரு கட்டமைப்பில் செயல்படும்.
தொழிலாளர் சட்டங்களில் மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்படும். தொழிலாளர்களுக்கான வேலைநிலைகள் பாதுகாப்பாகவும், ஊதியம் குறித்த விவகாரங்கள் தெளிவாகவும், துன்புறுத்தல், தொழிலாளர் உரிமைகள் மீறல்கள் தடுக்கும் விதமாக புதிய விதிகள் தயாராகின்றன. தொழிலாளர்களுக்கு தனியான புகார் சென்டர், ஆன்லைன் சேவைகள் விரைவில் அறிமுகமாகும்.
கார்பன் குறைப்பு திட்டம்
யுஏஇ தனது சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது. பசுமை எரிசக்தி திட்டங்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் கட்டுப்பாடுகள், நீர் மேலாண்மை திட்டங்கள், பசுமை நகரமைப்பு ஆகியவை முன்னெடுக்கப்பட உள்ளன. 2030 காலக்கட்டில் யுஏஇ கார்பன் பயன்பாட்டு குறைப்பில் முன்னணி இடம் பெற முயலும்.
குடியிருப்பாளர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் இடையிலான ஒப்பந்தங்கள் அதிக பட்சமாகவும், சட்டப்பூர்வமாகவும் மாறும். வாடகை கட்டுப்பாடுகள், நீக்க உத்தரவு நடைமுறைகள் போன்றவை தெளிவாக்கப்படும்.
யுஏஇ அரசு சேவைகளை முழுமையாக டிஜிட்டல் வடிவில் மாற்ற திட்டமிட்டுள்ளது. அரசு சேவைகள், தனியார் நலவாய்ந்த சேவைகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். ஒரு டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் பெரும்பாலான சேவைகள் பெற இயலும்.
இந்த மாற்றங்கள் ஐக்கிய அரபு அமீரக வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் புதிய நடைமுறைகளுக்கு தயாராக வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
![]()





