செய்திகள்

ஐகோர்ட்டு விருந்தினர் மாளிகையின் புதிய நிர்வாக அலுவலகம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார்

Makkal Kural Official

சென்னை, ஜன.19-

ஜூடிசியல் அகாடமியில் கோர்ட்டு விருந்தினர் மாளிகைக்கு புதிய நிர்வாக அலுவலக கட்டிடத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தாமரை இல்லத்தில், நீதித்துறை அலுவலகத்துக்காக பல அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், ஜி.ஜெயச்சந்திரன், என்.சதீஷ்குமார், சி.சரவணன், பி.டி.ஆஷா, எம்.தண்டபாணி, என்.செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள ஜூடிசியல் அகாடமியில், ஐகோர்ட்டு விருந்தினர் மாளிகைக்கு நிர்வாக அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *