செய்திகள்

எல்.முருகன் இல்லத்தில் நாளை பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 13–

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (14–ந்தேதி) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை (14–ந்தேதி) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாட உள்ளார்.

இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதுடன், சிறுதானியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *