சென்னை, டிச. 4–
எம்.ஜி.ஆர். நகர், ராமசாமி தெருவில் வசித்து வரும் சுந்தர்ராஜ் என்பவர் அன்னை சத்யா தெருவில் அவரது மாமனாரின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள, தனது வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வாசல் பகுதியில் மறைத்து வைத்துவிட்டு அவரது மனைவியுடன் சென்றுவிட்டார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவில் பூட்டு இல்லாமல் இருந்ததால், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.2.65 லட்சம் பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது.
இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, இதில் தொடர்புடைய 14 வயது சிறுவனை பிடித்தனர். விசாரணைக்குப் பின்னர் அந்த சிறுவன் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
![]()





