செய்திகள்

‘‘என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

Makkal Kural Official

சென்னை, ஜன. 19–

திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, “என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றுநடைபெற்றது.

சென்னை மெரினாவில் நடிகை சுஹாசினி மணிரத்தினம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மெரினாவினை தூய்மையாக வைப்பதற்கான “என் சென்னை என் பெருமை, என் மெரினா என் பொறுப்பு” விழிப்புணர்வு இயக்க தொடக்க நிகழ்ச்சியில், இதற்காக வடிவமைக்கப்பட்ட ஜெர்சியினை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மெரினாவின் பெருமை மற்றும் தூய்மையாகப் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்களும், நடிகர் சின்னி ஜெயந்த்தின் மெரினாவில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகைச்சுவை நிகழ்ச்சியும், விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகராட்சி இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன், தொழிலதிபர் நீனா ரெட்டி, நடிகர் சின்னி ஜெயந்த், ராணி மேரி கல்லூரியின் பேராசிரியர்கள் ஈஸ்வரி ரமேஷ், ரசியா பேகம், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *