சேலம், ஜன. 5:
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.மு.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர்.
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (4–ந் தேதி), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், தி.மு.க-வைச் சேர்ந்த, வி.சி. வரதராஜ் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர் வி.பி. முத்துசாமி, மாவட்ட தொண்டர் அணி இணைச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் வார்டு உறுப்பினருமான முத்துலட்சுமி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் சஞ்சீவ்குமார், கிளைச் செயலாளர் டி.சுப்ரமணியம், அரியம் கிளைச் செயலாளர் காலதம்படி, மாவட்டப் பிரதிநிதி தமிழ்செல்வன் மற்றும் நம்பிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 392 பேர்களும்;
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திவாகர் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் 21 பேர்களும்;
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியச்செயலாளர் அழகேஷ், ஒன்றிய துணைச்செயலாளர் குப்புசாமி, மாவட்ட அவைத்தலைவர் அப்புசாமி உள்ளிட்ட 15 பேர்களும்;
ம.தி.மு.க-வைச் சேர்ந்த, மாவட்ட அவைத் தலைவர் ஞானசேகரன்; நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீபக்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, கடம்பூர் மலை வட்டார கமிட்டி தலைவர் சுப்ரமணியம், திங்களூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாதேஷ், தாளவாடி மலை வட்டார கமிட்டி தலைவர் திரு. சாமி உள்ளிட்ட 24 பேர்களும்; இளைஞர்கள் 46 பேர்களும் என, ஆக மொத்தம் 500 பேர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பெரம்பலூர் மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் தழுதாழை சேகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பழனிவேலு, வேப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. கண்ணுசாமி,
மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் அசோகன், வேப்பந்தட்டை ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் மகேந்திரன், கரியானூர் ஊராட்சிச் செயலாளர் நல்லநாயகம், வேப்பூர் ஊராட்சிச் செயலாளர் முத்தையா மற்றும் டவுன் பிளானிங் முன்னாள் இணை இயக்குநர் தனராஜ் ஆகியோர்
நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
![]()





