செய்திகள்

ஊழல் செய்ய மாட்டேன்;விஜய் உறுதி

Makkal Kural Official

ஆண்ட கட்சி நேரடியாகவும், ஆளும் கட்சி மறைமுகமாகவும் பா.ஜ.க.விடம் சரண்டர்

  • எந்த அழுத்தத்திற்கும் அடி பணியமாட்டேன்
  • தனியாக நின்றாலும் வெற்றி பெறும் மிகப் பெரிய படை நமது படை

சென்னை, ஜன. 25–
ஊழல் செய்யவே மாட்டேன், ஒரு பைசா கூட தொட மாட்டேன். எனக்கு அதை தொட வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு துளி ஊழல் கூட படிய விடமாட்டேன் என்று த.வெ.க. தலைவர் விஜய் உறுதிப்பட கூறினார்.
தவெக செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. விஜய் மேடைக்கு வந்தவுடன் நிர்வாகிகள், தொண்டர்கள் ‘விசில்’ அடித்து விஜய்யை வரவேற்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. த.வெ.க.விற்கு ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து நடக்கும் முதல் கூட்டம் என்பதால் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கழுத்தில் ‘விசில்’ தொங்கவிட்டிருந்தனர்.
விஜய் கடந்த மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க. கூட்டத்தில் கலந்து கொண்டார்.
விசில் சத்தம் காதை கிழித்தது
விஜய மேடைக்கு வந்ததும் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் அரங்கம் அதிரும் வகையில் நீண்ட நேரம் ‘விசில்’ அடித்தனர். இதனை விஜய் ரசித்தார். ஒரு கட்டத்தில் விசில் சத்தம் காதை கிழித்தது. இதைத் தொடர்ந்து விஜய் இரண்டு காதுகளையும் கைகளால் மூடிக்கொண்டு புன்னகைத்தார்.
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டத்தில் மேடையில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தவெக கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கும் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுன், கே.ஏ. செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், ஜெ.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் பேசினர்.
ஊழல் செய்யவே மாட்டேன்
இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:–
நமது அரசியல் பயணத்தில் மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன். நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா இந்த ஆளு. இந்த மூஞ்ச பார்த்தா அப்படியா தெரியுது. அப்படி நடக்காது. அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டால், அழுத்தம் உள்ளது; ஆனால் நமக்கு இல்லை.
பாஜகவிடம் அதிமுக நேரடியாக சரண் அடைந்துவிட்டது. அவர்கள் நேரடியாக சரண் அடைந்தனர். மற்றொருவர் மறைமுகமாக சரண் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் வேசம் களையக்கூடாது என்பதற்காக கலர் கலராக அறிவிப்புகள் வெளியிடுகின்றனர். இவர்கள் இப்படி இருக்கிறார்களே. நமக்காக யாரும் இல்லையா? என்று மக்கள் ஒருவிதமான அழுத்தத்தில் இருக்கும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *