காஞ்சிபுரம் ஜன. 12–
காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக மாவட்ட அம்மா பேரவை சார்பில் உத்திரமேரூர் பஜாரில் தொழில் நிறுவனங்கள் , சிறு கடைகள் , வியாபாரிகள் , பொதுமக்கள் ஆகியோரிடம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேயுஎஸ். சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் என்றும் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக எடப்பாடியாரை அரியணை ஏற்றுவோம் என்றும் பொதுமக்கள் ஆகிய நீங்கள் எங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கினார்.
மேலும் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் , அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், நகர கழகச் செயலாளர் ஜெயவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் திருப்பலிவனம் கே.பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம் , திருவந்தவார் வி.முருகன், கேஆர்.தர்மன், களக்காட்டூர் ராஜி , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் டைல்ஸ் சேகர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஏ.ரவிசங்கர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் என்பி.தினகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் ஏபிஜி.பெருமாள், பட்டா சுந்தர், ஒன்றிய துணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சு.இரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி பூந்தண்டலம் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் உதயா உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
![]()





