மிர்சாபூர், நவ. 5–
உத்தரப்பிரதேசத்தில் ரெயில் தண்டவாளத்தை கடந்த 6 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் இன்று காலை 9:15 மணியளவில் சோபன்-பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பயணிகள் சிலர் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்த செல்ல முயன்றனர். முயன்றனர். அப்போது மூன்றாவது நடைமேடை வழியாக சென்ற கல்கா மெயில் மோதியதில் 6 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உடல் சிதறி சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
![]()





