சென்னை, அக்.5–
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் – 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், படப்பிடிப்பு ஓய்வில் ஒருவார ஆன்மீகப் பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத் செல்கிறார். இதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லவுள்ள ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
![]()





