சென்னை, ஆக. 5
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயித்து வருகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது.
கடந்த ஜூலை 23ம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75,040க்கு விற்பனையானது. அதன் பிறகு மறுநாளில் இருந்தே தங்கம் விலை குறைய தொடங்கியது. தற்போது மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,360க்கு விற்பனை ஆனது. இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,370க்கு விற்பனை ஆகிறது. மீண்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.125-க்கு விற்பனை ஆகிறது.
![]()




