செய்திகள்

இந்தோனேசியாவில் பஸ் விபத்து 16 பயணிகள் பலி

Makkal Kural Official

ஜகார்த்தா, டிச. 22:

இந்தோனேசியாவில் பயணிகள் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 34 பேர்களுடன் சுங்கச் சாலையில் நேற்று நள்ளிரவு சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச்சுவர் மீது பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பழமையான அரச நகரமான யோக்யகர்த்தாவுக்கு பேருந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தேடுதல் மற்றும் மீட்புக் குழு அதிகாரி புடியோனோ தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *