சென்னை, ஜன. 17–
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மொழித்துறை சார்பாக பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. மொழித்துறைத் தலைவர் மா. தென்கரை மகராஜ பிள்ளை அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் உத்திரா த. தலைமையுரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பொங்கல் விழா என்பது தமிழ் கலாச்சாரத்தில் உள்ள நன்றி தெரிவிக்கும் விழா எனவும் நன்றி செலுத்துதல் தமிழ்ப் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அங்கம் எனவும் கூறினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் முனைவர் நெல்லை பி. சுப்பையா கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தமிழரின் அறிவுசார் சிந்தனையையும் வரலாற்றையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் கல்வியறிவுடன் கலை அறிவையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அதுவே அவர்களை வாழ்வின் உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ரங்கோலி, நடனம், தீயில்லாச் சமையல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. சான்றிதழ் மற்றும் பரிசுகளைக் கல்லூரி மேலாண்மை நிர்வாகி மா. டேவிட் ரயன் வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவில் துணை முதல்வர் க.மலர்விழி, கலைப்புல முதன்மையர் இரா. சக்திபிரபா, மொழித்துறை மற்றும் பிறதுறைப் பேராசிரியர்கள், பல்துறை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக மொழித்துறை உதவிப்பேராசிரியர் மா. சிவகாந்தன் நன்றி கூறினார்.
![]()





