செய்திகள்

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் மரியாதை

Makkal Kural Official

புதுடெல்லி, அக். 31–

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரது நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அங்கு நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *