செய்திகள்

இந்தியா- பிரிட்டன் தடையற்ற வர்த்தகம்

Makkal Kural Official

தலையங்கம்


ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்று திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்ததாக இந்த மாத இறுதியில் பிரிட்டனுக்குப் பயணம் செய்யவுள்ளார்.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியா-பிரிட்டன் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) முறையாகக் கையெழுத்திடுவது ஆகும்.

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் வர்த்தக, முதலீட்டு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் “மைல்கல்” என பிரதமர் மோடி வர்ணித்துள்ளார்.

சமீபமாய் ஜனாதிபதி டிரம்ப் அச்சுறுத்திவரும் அமெரிக்காவின் வரி அழுத்தங்களுக்குப் இடிதாங்கியாய் இருக்கவே இந்தியாவின் இப்புதிய திட்டம் உள்ளது. .

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வர்த்தக வரிகளை ஒரு அரசியல் ஆயுதமாகவே மாற்றியுள்ளதை இந்தியா மற்றும் பல வளரும் நாடுகள் கவனித்து வருகிறது.

இந்தியா மீதான வரி உயர்வுகள், குறிப்பாக Section 232 மூலம் ஆட்டோ பாக்ஸ் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட 25% வரி, ஏற்கனவே பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டிரம்ப் சமீபத்தில் பிரிக்ஸ் நாடுகள் மீது கூடுதல் 10% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான காரணமாக, “அமெரிக்க டாலரை பலவீனப்படுத்தும் முயற்சியில் பிரிக்ஸ் நாடுகள் ஈடுபடுகின்றன” என்ற குற்றச்சாட்டு முன்வைத்தார்.

இந்த ஒப்பந்தம், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 99% பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறது. துணி, மருந்து, தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு பிரிட்டன் சந்தையில் விரிவான அணுகல் கிடைக்கும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வலையமைப்பாக அமையும்.

புது ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட 99% வரிகள் நீக்கப்படுகின்றன. இந்தியாவின் உயர் வளர்ச்சியுள்ள துறைகள் தொழில்நுட்ப சேவைகள், மருந்துகள், வஸ்திரங்கள், வேளாண்மை உற்பத்திகள் போன்ற துறைகள். மிகவும் பயனடையப் போகின்றன.

இந்த ஒப்பந்தம், இந்தியாவின் $3.7 டிரில்லியன் பொருளாதாரத்தை உலக வர்த்தகத்தில் புதிய நிலைக்கு உயர்த்தும்.

மொத்ததில்

இந்தச் சூழலில் இங்கிலாந்துடன் கையெழுத்தாகும் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு நம்பகமான மாற்று வாய்ப்பாக அமையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *