அமிர்தசரஸ், ஜன. 18–
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பஞ்சாப் பதான்கோட் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது எல்லைப் பகுதியான நரோட் ஜெய்மால் சிங் அருகே 3 ஏகே–47 துப்பாக்கிகள், 2 கைத் துப்பாக்கிகள், 98 தோட்டாக்கள், வெடிமருந்து உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சோதனையின்போது மாநிலத்தில் சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதியான ரிண்டா என்பவர்தான், இந்த ஆயுதங்களை அனுப்பி வைத்திருக்கக் கூடும் என்று உளவுத் துறை தெரிவித்திருப்பதாக டிஐஜி சந்தீப் கோயல் கூறினார். பாகிஸ்தானின் உளவுத் துறை நிறுவனமான ஐஎஸ்ஐயின் முழு ஆதரவுடன் ரிண்டா செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.எல்லைப் பகுதியில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும் கைதுசெய்ய பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
![]()





