செய்திகள்

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகிறார்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 22–

இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (24–ந்தேதி) தமிழகம் வரவிருக்கிறார்.

வருகிற செப்டம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர கவர்னரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து தெலுங்கானாவைச் சேர்ந்தவரும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி ‘இந்தியா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இருவரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோர உள்ளார். அந்தவகையில் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் தமிழகம் வரவிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் வரவுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *