மஸ்கட், டிச. 18:
எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஓமன் சென்றார். ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக்-ஐ சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ஓமனில் கிடைத்த இந்த அன்பான வரவேற்பிற்கு நன்றி. இங்குள்ள இந்திய சமூகத்தினரின் பாசமும் உற்சாகமும், இந்தியாவிற்கும் ஓமனிற்கும் இடையிலான மக்கள் உறவுகளை பிரதிபலிக்கின்றன என கூறியுள்ளார்.
இந்தியா–ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
![]()





