செய்திகள்

இந்தியாவுக்கு ரூ.822 கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

Makkal Kural Official

வாஷிங்டன், நவ.20-

இந்தியாவுக்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட இந்தியா –அமெரிக்கா இடையேயான உறவு மற்றும் வர்த்தகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறது. இந்த சூழலில், இந்திய ராணுவத்திற்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்ஜிஎம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள், 216 எக்ஸ்கலிபர் பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவம் பெற இருக்கிறது.

இது குறித்து அமெரிக்காவின் டிஎஸ்சிஏ எனப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்;

ராணுவ உபகரணங் களுடன் பாதுகாப்பு சோதனைகள், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி, ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுபித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் இந்திய கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆயுத விற்பனை மூலம், அமெரிக்கா -– இந்தியா இடையிலான ராஜதந்திர உறவுகள் வலுப்படுத்தப்படும். அதோடு, தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவின் திறன் மேம்படுத்தப்படும்.

இதன்மூலம், பிராந்திய அச்சுறுத்தல்களை தடுக்க முடியும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் எப்ஜிஎம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பயன்படுத்தி வருகிறது. இது ராணுவ வீரர்களின் தோள் மீது வைத்து ஏவப்படும் என்பதால், டேங்கர் போன்ற இலக்குகளை நீண்ட தூரத்திலிருந்து அதிக துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *