செய்திகள்

இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது: கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல்

Makkal Kural Official

வாஷிங்டன், ஜூலை 25–

கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களில் இந்தியர்கள் அதிகம் பணியாற்றி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நிறுவனங்களுக்கு மிகக்கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். வாஷிங்டன்னில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது:-

நீண்ட காலமாக அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை தீவிரமான உலகமயமாக்கலைப் பின்பற்றியது. மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நடைமுறை, லட்சக்கணக்கான அமெரிக்கர்களை பாதித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள், சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி அவற்றில் இந்தியாவில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைத்துள்ளன.

அதேநேரத்தில் அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்ததும் நடந்தது. கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், அமெரிக்கா வழங்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இனி அது நடக்காது. அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளைக் கட்டுவதையும், இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் விட்டு விட்டு, உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *