செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர லாபம் ரூ.1,111 கோடி; இதுவரை இல்லா உச்சம்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 22–

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 75.75% உயர்ந்து ரூ.1,111 கோடியாக உயர்ந்துள்ளது. லாபம் 40.70% அதிகரித்து ரூ.2,358 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் 12.50% அதிகரித்து ரூ.2,746 கோயடியாகவும் உயர்ந்துள்ளது.

நிகர வட்டி நடப்பு ஆண்டு ஜூன் 30ந் தேதி 3.04% ஆக இருந்தது. வருமானத்தின் செலவு 754 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு 44.22%ஆக பதிவாகியுள்ளது. சொத்துக்கள் மீதான வருவாய் 44 அடிப்படைப்புள்ளிகள் உயர்ந்து 1.14% ஆக உள்ளது என்று நிர்வாக இயக்குனர் அஜய்குமார் பெருமிதத்தோடு கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், பங்கு மீதான வருவாய் 490 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 19%ஆக உள்ளது. மொத்த வணிகம் 12.19% வளர்ச்சியடைந்து ரூ.5,93, 213 கோடியாக உள்ளது. மொத்த வைப்புத் தொகை 10.75% அதிகரித்து ரூ.3,30,792 கோடியாக உள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புத் தொகை 15% அதிகரித்து ரூ.1,44,837 கோடியாக உள்ளது.

‘காசா’ விகிதம் 161 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு ஜூன் 30ந் தேதி 43.78%ஆக உள்ளது. மொத்த கடன்கள் 14.05% அதிகரித்து ரூ.2,62,421 கோடியாக உள்ளது. கடன், வைப்புத் தொகை விகிதம் ஜூன் 30ந் தேதி 79.33% ஆக அதிகரித்துள்ளது.

மொத்த வாராக்கடன் 92 அடிப்படைப்புள்ளிகள் மேம்பட்டு ஜூன் 30ந் தேதி 1.97% ஆக உள்ளது.

நிகர வாராக்கடன் 19 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து ஜூன் 30ந்தேதி 0.32% ஆக பதிவாகியுள்ளது. நழுவல் விகிதம் 3 அடிப்படைப்புள்ளிகள் அதிகரித்து ஜூன் 30ந் தேதி 0.10% ஆக உள்ளது.

கடன் செலவு ஜூன் 30ந் தேதி 0.29% ஆக பதிவாகியிருந்தது. மொத்த கடன் மீட்பு 46.13% அதிகரித்து ரூ.851 கோடியாக உள்ளது. வாரா ஐயக்கடன்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விகிதம் 51 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 97.47% ஆக உள்ளது. மூலதன போதுமான விகிதம் 46 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு ஜூன் 30ல் 18.28% ஆக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *