சென்னை-, ஜன. 27:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலகத்தில் தாய் திருநாட்டின் குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீருடை அணிந்த இவ்வங்கியின் பாதுகாப்பு பணியாளர்களது மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது.
நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசிக்க பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இவ்விழாவில் செயல் இயக்குனர் தனராஜ் .டி, தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜீவ் குமார், வங்கியின் மூத்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
வங்கியின் பணியாளர்கள், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அதிக உற்சாகத்துடனும், அர்ப்பணிப்புணர்வுடனும் பங்கேற்றனர்.
![]()





