ஜனவரி 18, 1788 அன்று ஆஸ்திரேலியாவின் பாட்டனி விரிகுடாவில் (Botany Bay) முதல் கப்பல் படை (First Fleet) வந்தது. இது பிரிட்டிஷ் பேரரசின் காலனித்துவ விரிவாக்கத்தின் மைல்கல். இங்கிலாந்து அனுப்பிய 11 கப்பல்களில் 1,400 க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இந்த நிகழ்வு, குடியேற்றம், ஆட்சி, மனித உரிமை மற்றும் வரலாற்று நீதி குறித்து இன்றும் உலகளவில் விவாதிக்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வு. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முடிவு:
இங்கிலாந்து சிறைகளில் அழுத்தம் அதிகரித்ததால், அமெரிக்க யுத்தத்திற்குப் பின் சிறுபான்மையினரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கேப்டன் ஆர்தர் பிலிப் தலைமையில் மே 13, 1787 அன்று போர்ட்ஸ் மவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல்கள், டெனரிப், ரியோ டி ஜனீரோ, கேப் டவுன் வழியாக 8 மாதங்களில் வந்தது. மோசமான மண், தண்ணீர் இல்லாததால் ஜனவரி 26 அன்று சிட்னி கோவ் சென்று காலனியை நிறுவினர்.
இந்த வருகை காரணமாக அன்று முதல் ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களுக்கு (Aboriginal Australians) பெரும் மாற்றங்களையும் துயரங்களையும் கொண்டு வந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த நிலத்தில் வாழ்ந்த பழங்குடியினர், நில இழப்பு, நோய்கள் மற்றும் சமூக அழிவை எதிர்கொண்டனர்.
எனவே, 1788 ஆம் ஆண்டு ஒரு பக்கத்தில் “நவீன ஆஸ்திரேலியாவின் பிறப்பு” எனக் கருதப்பட்டாலும், மற்றொரு பக்கத்தில் அது பழங்குடியினரின் வேதனைக்குரிய காலத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. 40,000 ஆண்டுகள் பழமையான ஆதி மனிதர்களின் (Eora) நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடங்கியது.
தமிழ்நாட்டுடன் தொடர்பு:
தமிழ்நாட்டின் பார்வையில், இந்த நிகழ்வு உலக வரலாற்றை புரிந்துகொள்ள ஒரு முக்கியமான பாடமாக அமைகிறது. காலனிய ஆதிக்கம் எவ்வாறு புதிய நாடுகளை உருவாக்கியதோ, அதே நேரத்தில் பழமையான நாகரிகங்களையும் சமூகங்களையும் பாதித்தது என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த தின வரலாறு நினைவூட்டுகிறது.
18ஆம் நூற்றாண்டில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தமிழ்நாட்டில் கார்னாடிக் போர்களால் ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஆஸ்திரேலியா நிகழ்வு பிரிட்டிஷ் பேரரசை வலுப்படுத்தி, 19ஆம் நூற்றாண்டில் தமிழர்களை (கூலித் தொழிலாளர்களாக) ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியது. சிறுபான்மை இடம்பெயர்வு முறையும், இந்தியாவின் வணிகப் பாதைகளும் இதனால் பாதிக்கப்பட்டன.
![]()





