செய்திகள்

ஆடி மாதத்தையொட்டி தங்கம், வைரம், வெள்ளிப் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு:

Makkal Kural Official

சென்னை, ஆக.1-

ஆடி மாதத்தையொட்டி தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம், ரத்தினக் கற்கள் போன்ற எந்தப் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது.

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களின் பல்வேறு வடிவமைப்புகளின் உலகளாவிய கலெக்‌ஷன்களை ஜி.ஆர்.டி. கொண்டு இருக்கிறது. 66 கிளைகளுடன் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் தனித்துவமான சலுகைகள், பரிசுகளை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை சேர்த்து வருகிறது.

அந்த வரிசையில் ஆடி மாதத்தையொட்டி, ஜி.ஆர்.டி.யின் எந்த ஒரு ஷோரூமிலும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்குகிறது.

வாங்கும் பொருட்கள் சிறியதோ, பெரியதோ என இல்லாமல், அனைவருக்கும் நிச்சயமான ஆச்சரிய பரிசை வழங்குகிறது. ஆடி மாதம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு ஜி.ஆர்.டி.யின் இந்த சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆனந்த் அனந்த பத்மநாபன் கூறுகையில், ‘யாருக்குத்தான் பரிசு பெற பிடிக்காது? அதனால்தான் ஒவ்வொரு ஆடி மாதத்திலும் ஜி.ஆர்.டி.யில் பரிசு வழங்குவதை ஒரு மரபாக மாற்ற முடிவு செய்தோம். அதன் வாயிலாக ஆச்சரியத்தை உருவாக்க விரும்புகிறோம். வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், சிறப்பு பரிசை வழங்குவோம்’ என்றார்.

இதேபோல், ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மற்றொரு நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘இந்த சிறப்புமிக்க ஆடி மாதத்தில் எங்களின் உலகளாவிய கலெக்‌ஷன்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். குடும்பங்கள் ஒன்றுகூடி, மரபுகளை கொண்டாடி, அன்புக்குரியவர்களுடன் பரிசுகளை பகிர்ந்து கொள்ளும் தருணமாக நாங்கள் பார்க்கிறோம்.

இந்த ஆச்சரிய பரிசுகள் எங்கள் வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஜி.ஆர்.டி. நன்றி கூறும் ஒரு வழியாகும்’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *