செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்தியா -– பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்

Makkal Kural Official

புதுடெல்லி, செப். 11–

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா -– பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியா -– பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஊர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்ட மாணவர்கள் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை (14-ம் தேதி) அன்று நடைபெற உள்ள நிலையில் இதனை அவசர வழக்காக எடுத்து கொண்டு நாளையே விசாரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது திட்டமிட்ட படி நடைபெறும் என்று தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *