லண்டன், செப் 5–
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இது குறித்து லண்டனிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
‘‘தமிழர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று (4–ந் தேதி) மாலை நிகழ்ச்சியில் உலகப் புகழ்மிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நம்முடைய சுயமரியாதை தலைவர், தன்மானத் தலைவர் தந்தை பெரியாருடைய உருவப் படத்தை திறந்து வைக்க இருக்கிறேன் என்ற செய்தி உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். அதை திறந்து வைத்து, பேசுவதை எண்ணி பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன்.
ஏனென்றால் அவர் தமிழர் தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு தலைவர் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தன்மானத்தை காத்த தலைவராக, சுயமரியாதையை காத்த தலைவராக விளங்கி கொண்டு இருக்கக்கூடியவர்’’.
இவ்வாறு அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
காலை ஒளிபரப்பு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப் பட திறப்பு விழாவில் முதலமைச்சரின் உரை இன்று (5–ந் தேதி) இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில் ஒளிபரப்பப்பட்டது.
![]()





