செய்திகள்

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Makkal Kural Official

கடலூர், ஜூலை 18–

கடலூரில் அண்ணா தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016-2021ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அதுமட்டுமில்லாமல், இவரது கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடலூர் பண்ருட்டியில் உள்ள சத்யாவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், மீண்டும் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *