முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
மதுரை, ஜூலை 25–-
மதுரை அரவிந்த் கண் மருத்துவ குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி. இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
அவரது உடல் அஞ்சலிக்காக அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நம்பெருமாள்சாமி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். பல லட்சம் பேருக்கு பார்வை அளித்த அவரது மறைவு மருத்துவத்துறைக்கும், மதுரை மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், மருத்துவத்துறை நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று கவர்னர் ஆர்.என்.ரவி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
![]()





