சென்னை, ஆக.22-–
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பலர் வசித்து வருகின்றனர். அந்த தமிழர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு அளித்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துகுடி, தென்காசி, ராமநாதபுரம், மதுரை, திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
அப்போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனுக்காக நிதி உதவி, குடியுரிமை முயற்சிகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு போன்ற மறுவாழ்வுத் திட்டங்களுக்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் உடனிருந்தார்.
![]()





